நாயாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன் - சுரேன் ராகவன்!


பாராளுமன்றத்தில் இன்று (23) சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை சமர்ப்பித்த பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன், சர்ச்சைக்குரிய அறிவிப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

தமிழ் அரசியல் கைதிகள் குறித்த விவாதத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்த கருத்துக்கு அவர் பதிலளித்த போது அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

"ஆம், நான் அரசாங்கத்தின் காலணியை நக்கும் நாய்தான். பிரிவினைவாதத்தை ஆதரிக்கும் கொலைகார பயங்கரவாதத்தை ஆதரிக்கும் கூலிப்படையினராக இருப்பதை விட எனது அரசைப் பாதுகாக்க ஒரு நாயாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன். ” என்றார்.