கிரானில் நினைவேந்தல் மேற்கொண்டவர்களுக்கு ஆகஸ்ட் 09 திகதிவரை விளக்கமறியல் நீடிப்பு

 


ரூத் ருத்ரா

மட்டக்களப்பு – கிரான் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்  நிகழ்வு நடாத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கல்குடா பொலிசாரினால் கடந்த மே18 திகதி  இரு பெண்கள் உட்பட்ட 10பேர் கைது செய்யப்பட்ட வழக்கு இன்று வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது

வாழைச்சேனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.பசீல் அவர்கள் முன்னிலையில் இவ் வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கில் மனித உரிமை செயற்பாட்டாளருமான சட்டத்தரணி ரெட்ணவேல் மற்றும்  கே.சுகாஸ் உள்ளிட்ட சட்டத்தரணிகள்  கைது செய்யப்பட்ட (10) பேர் சார்பாக ஆயராகியிருந்தனர்.

குறித்த வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட்  மாதம் 09.08.2021 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் எவ்விதமான அறிக்கை மற்றும் அடையாளங்களும் மன்றில்  பொலிசார் சமர்ப்பிக்க வில்லை.

அத்தோடு பத்து சந்தேக நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவில்லை