
இலங்கை போக்குவரத்து சபையின் 285 ஊழியர்கள் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அவர்கள், வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களுக்கு பரிந்துரைகப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சர் கூறினார்.
அதிக எண்ணிக்கையிலான போக்குவரத்து சபை ஊழியர்கள் ஆபத்தில் இருப்பதால், நாளை (16) முதல் புதிய ஒழுங்குமுறையின் கீழ், ஊழியர்கள் சேவைக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதன்படி, சாரதி மற்றும் நடத்துனர் உள்ளிட்ட சபை ஊழியர்களையும் இரண்டு குழுக்களாக பிரித்து ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஒருமுறை வேலைக்கு அழைக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு எந்தவித சிரமமும் இன்றி தேவையான பஸ்களையும் சேவையில் ஈடுபடுத்துமாறு அனைத்து டிப்போ அதிகாரிகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.