மட்டக்களப்பில் வீீடொன்றில் இருந்து 3 வயது சிறுவன் சடலமாக மீட்பு


(ரீ.எல்.ஜவ்பர்கான்)

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காங்கேயனோடையில் 3 வயது சிறுவன் சடலமாக நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளான்.

காங்கேயனோடை பத்ரு. பள்ளிவாயல் வீதியில் சிறுவன் வசிக்கும் வீட்டிலிருந்தே குறித்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்

முஹம்மத் ரிழ்வான் எனும் சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

குறித்த சிறுவனின் தாய். குளித்து விட்டு வீட்டில் வந்து பார்த்தபோது சிறுவன் படுத்து கிடந்ததாகவும் சிறுவனுக்கு மேல். வீட்டிலுள்ள மேசை மின்விசிறி ஒன்று விழுந்து கிடப்பதை கண்டுள்ளார்.

சிறுவனை எழுப்பிய போது சிறுவன் எழுப்பாத நிலையில் அயலவர்களின் உதவியுடன் சிறுவனை ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது சிறுவன் உயிரிழந்து விட்டான் என்று வைத்தி மாலையில் தெரிவித்ததாக தெரியவருகின்றது

குறித்த சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கின்றனர்

சிறுவனின் சடலம் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்