
மக்கள் வாயை மூடினால் (முகத்தை) நாட்டை மூட வேண்டிய அவசியம் இருக்காது என்று சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில், நாட்டை முடக்கலாமா, வேண்டாமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சமூகத்தில் பலர் முகக்கவசங்களை சரியாக அணிவது போல் தெரியவில்லை, வைரஸ் வேகமாக பரவுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என்று சுட்டிக்காட்டினார்.
சுவரில் முகமூடிகளை வைப்பது பயனற்றது என்றும் முகக் கவசங்களை அணிவது தொடர்பான விதிகளை கடுமையாக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
பல்பொருள் அங்காடிகள் தொடர்பான புதிய சட்டங்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று குறிப்பிட்ட அவர், முடிந்தவரை பயணத்தை நிறுத்திவிட்டு வீட்டில் நேரத்தை செலவிடுமாறு மக்களை வலியுறுத்தினார்.