ஆசனவாய்க்குள் வைத்து ஹெரோய்ன் கடத்தல்!ஆசனவாய்க்குள் ஹெரோய்னை ஒழித்துக்கொண்டு யாழ்ப்பாணம் வந்த வயோதிபர் ஒருவர், நேற்று (13) கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் விசேட புலனாய்வு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, குறித்த வயோதிபர், பஸ்ஸில் இருந்து இறங்கும்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை கைது செய்து சோதனையிட்ட போது, 2 கிராம் 250 மில்லிகிராம் ஹெரோய்ன் ஆசன வாய்க்குள் இருந்தமை தெரியவந்தது.