திருகோணமலையில் எரிபொருள் கொள்கலன் விபத்து!திருகோணமலையில் அமைந்துள்ள இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்திலிருந்து எரிபொருள் ஏற்றிச்சென்ற எரிபொருள் கொள்கலன் ஒன்று இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4.00 மணியளவில் கப்பல்துறை எனும் பகுதியில் விபத்துக்குள்ளானது.

வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான குறித்த வாகனமானது, வீதியின் அருகிலுள்ள பாலம் ஒன்றுனையும் உடைத்துக்கொண்டும் திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் தடம்புரண்டுள்ளது.

விபத்துக்கான காரணம் இன்னும் அறியப்படாத நிலையில் ஓட்டுனர் நித்திரையாகிருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

விபத்தில் குறித்த வாகனத்தில் பயணித்த ஓட்டுனர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனும்திக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.