சீன தடுப்பூசியை போட்டுக்கொண்டு வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கு மிக முக்கிய தகவல்!வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்பவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பேச்சாளர் மங்கல ரன்தெனிய தெரிவித்தார்.

இதேவேளை, குவைட், கட்டார் மற்றும் சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்பவர்களுக்காக மூன்றாவது தடுப்பூசியாகவும் பைஸர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.

சீனாவின் தடுப்பூசிகளான சினோபார்ம் மற்றும் சினோவெக் தடுப்பூசிகளை போட்டுக்கொண்டவர்கள் மூன்றாவதாக பைசர் தடுப்பூசியை போட்டுக்கொண்டு தமது நாட்டுக்குள் வருமாறு ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.