பால் மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவிக்கின்றார்.
ஜனாதிபதிக்கும், அமைச்சர்களுக்கும் இடையில்நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
எனினும், முறையற்ற விதத்தில் பொருட்களுக்கான விலையை அதிகரிக்க அனுமதிக்க வேண்டாம் என ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.