இளம் யுவதி தூக்கிட்டு தற்கொலை -துறைநீலாவணையில் சம்பவம்(ஷமி மண்டூர்)

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துறைநீலாவணை பிரதேசத்தைச் சேர்ந்த மோகநாதன் -சறோஜினி வயது (22) என்பவர் தனது வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று (9) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனது தாய்யினை இழந்திருந்த நிலையில் தனது தந்தையின் பராமரிப்பில் வாழ்ந்து வந்த குறித்த யுவதி தனது வீட்டில் இருந்த தங்க நகைகளை அடகு வைப்பதற்காக நெருங்கிய ஒருவருக்கு கொடுத்திருந்ததாகவும் அதனை இன்று மீட்டு தருவதாக தனது தந்தையிடம் கூறியிருக்கின்றார்.இந்நிலையில் குறித்த யுவதி தனது வீட்டு அறையினுள் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் அவரின் சகோதரன் கண்டுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற களுவாஞ்சிகுடி பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை-ஜீவரெத்தினம் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.