தங்களுக்குரிய தபால் நிலையத்தினை மீளவும் தங்கள் பிரதேசத்திற்கு இடமாற்றி தருமாறு கேட்டு இன்று மட்டக்களப்பு வாகநேரி பிரதேசத்தில் பிரதேச மக்கள் சிலர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று மதியம் வாகநேரி பிள்ளையார் ஆலய வீதியில் ஓன்று கூடிய மக்கள் பதாதைகளை கையில் ஏந்தியவாறு 'எங்களுக்கு தாபால் நிலையம் வேண்டும்' என கோஷங்களை எழுப்பி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 1985 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தங்கள் பிரதேத்தில் இருந்த வாகநேரி தபால் நிலையம் யுத்த சூழ் நிலை காரணமாக காவத்தமுனை ஓட்டமாவடி பிரதேசத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு அப் பகுதியிலேயே செயற்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர்.
தங்களுக்குரிய தபாலகம் சார்ந்த பல் வேறு செயற்பாடுகள் நிறைவேற்றுவதில் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாக கூறுகின்றனர். மாதாந்தம் அரசினால் வழங்கப்படும் முதியோர் கொடுப்பனவு மற்றும் மாதாந்த பொதுசன உதவிப் பணம் போன்றவற்றை பெறும் முதியவர்கள் மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்கள் 10 கிலோ மீற்றர் தூரம் கால் நடையாகவும் முச்சக்கர வண்டியிலும் செல்ல வேண்டியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
250 ரூபா பொதுசன உதவிப் பணத்தினை பெறுவதற்கு முச்சக்கரவண்டிக்கான கூலி 1000 ரூபா வழங்கவேண்டியுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர். எனவே நீண்டகாலப் பிரச்சினையான இவ் தபாலகத்தினை மீண்டும் தங்கள் பிரதேசத்திற்கு இடமாற்றி தந்துதவுமாறு கேட்கின்றனர்.