புதிய விலையுடன் இன்று முதல் சந்தைகளில் பால்மா!

 


இறக்குமதி செய்யப்பட்ட பால் மா புதிய விலையுடன் இன்று முதல் சந்தைக்கு வெளியிடப்படும் என்று பால் மா இறக்குமதியாளர்கள் சங்க உறுப்பினர் லக்ஸ்மன் வீரசூரிய தெரிவித்தார்.

அதன்படி, புதிய விலையில் ஒரு கிலோ பால் மா 1,195 ரூபாய்க்கும் 400 கிராம் பால் மா 480 ரூபாய்க்கும் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை, இன்று முதல் பால் மா பற்றாக்குறையின்றி மொத்த சந்தைக்கு வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.