வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு



நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தென் மாகாணத்திலும், களுத்துறை மாவட்டத்திலும் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் ஓரளவு பலத்த மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வடக்கு,கிழக்கு மாகாணங்களிலும் சில பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.