“நாடு அழிந்துவிடும்” சஜித் பிரேமதாச எச்சரிக்கைஇலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு இன்னும் ஒன்றரை மாதங்களுக்கு மாத்திரமே போதுமானது என எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஒரு வலுவான நாடு ஏழு முதல் எட்டு மாதங்களுக்கு வெளிநாட்டு கையிருப்பை வைத்திருக்க வேண்டும்.

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டால் நாடு அழிந்துவிடும், தொழிற்சாலைகள் இயங்க முடியாமல் மக்கள் மேலும் சுமைக்கு ஆளாக நேரிடும் எனவும் அவர் தெரிவித்தார்.

திஸ்ஸமஹாராமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அத்தியாவசியப் பொருட்களை வரிசையில் நின்று பெற்றுக் கொள்ளவா 6.9 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள் என அவர் கேள்வி எழுப்பியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.