வியாழேந்திரனின் பிறந்தநாளை முன்னிட்டு மட்டக்களப்பு வந்தாறுமூலையில் மாபெரும் இரத்ததான முகாம்



(சிஹாரா லத்தீப்)

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் 43 வது பிறந்த நாளை முன்னிட்டு முற்போக்கு தமிழர் கழகமும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மாவட்ட அமைப்பும் இணைந்து மாபெரும் இரத்ததான முகாமொன்றினை இன்று ஏற்பாடு செய்திருந்தது.

இராஜாங்க அமைச்சரின் ஏறாவூர் பற்று வந்தாறுமூலை பிராந்திய மக்கள்பணிமனை வளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த இரத்ததான முகாமில் இப்பிரதேச இளைஞர் யுவதிகள்பெருமளவில் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தனர்.

மாகாணத்தின் பிரதான வைத்தியசாலையான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் கேன்சர் ,கொரோனா தொற்று சிகிச்சை அளித்தல் மற்றும் தலசீமியா நோயாளர்களுக்கு இரத்த மாற்று செய்தல் போன்றவற்றிற்கு ஏற்பட்டிருக்கின்ற பெரும் இரத்த தட்டுப்பாட்டை போக்குமுகமாக இந்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்முகாமில் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு இரத்த தானம் செய்தனர். ஏறாவூர் பற்று பிராந்திய மக்கள் பணி மனையில் இன்று ராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் பிறந்த 43 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவர்களது ஆதரவாளர்களால் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடபட்டது.

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் 43 வது பிறந்த நாளை முன்னிட்டு முற்போக்கு தமிழர் கழகமும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி யின் மாவட்ட அமைப்பினரும் இணைந்து மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்திக்கும் பொருட்டு பத்து தினங்களுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.