மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய ஆண்டில் சிறுபோகத்தில் இராணுவத்தையும் இணைத்து விவசாய உற்பத்திகளை அதிகரிப்பதே அரசாங்கத்தின் இலக்கு - கருணாகரன்


(வரதன்)

சேதனப்பசளை பாவனை பாரிய விவசாய புரட்சி திட்டமாகும்.இராணுவத் தினர் மூலம் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி சேதனப் பசளையை உற்பத் தியை மேற்கொள்வதே அரசாங்கத்தின் பசுமை செயலணி திட்டத்தை முன்னெடுக்கின்றது. நாட்டின் பாதுகாப்பு உணவு சுகாதாரம் ஆகிய பாதுகாப்புக்கள் முக்கியமானவை.உணவு பற்றாக்குறை நாட்டில் ஏற்பட கூடாது என்பதற்காகவே அரசாங்கம் இவ்வாறான திட்டங்களை முன்னெ டுக்கிறது.எமது விவசாயிகள் பாதிக்கப்படகூடாது என்பதற் காகவே இந்த பசுமை செயல்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது மட்டு மாவட்டத்தில் எதிர்வரும் சிறுபோகத்தை 33 ஆயிரத்து 700 ஹெக்டெ யரில் நெற் செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.என மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் இன்று மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பசுமை செயலணி பயிற்சி செயற்பட்டறையில் இவ்வாறு கருத்துதெரிவித்தார்.

ஜனாதிபதியின் சுபிட்சத்தை நோக்கு திட்டத்திற்கமைவாக இலங்கையில் பசுமை நஞ்சற்ற நாடு திட்டத்தின் கீழ் சேதன உர உற்பத்தியும் பாவனை நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மட்டு மாவட்டத்திலுள்ள விவசாயிகளின் உணவு உற்பத்தி திறனை அதிகரிக்கும் முகமாக மாவட்டத்திலுள்ள விவசாய திணைக்கள மற்றும் கமநல அபிவிருத்தி திணைக்கள உரச்செயலக வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கான பசுமை செயலணியின் செயற்திட்டம் தொடர்பான செயலமர்வு இன்று மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றது.இவ் நிகழ்விற்கு மட்டு மாவட்ட பசுமை செயலணி இணைப்பாளர் நிலுக்க பண்டார (231வது பிரிகெட் கொமாண்டர் ) மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த். மட்டு மாவட்ட விவசாய திணைக்கள- கமநல அபிவிருத்தி திணைக்கள (உரச்செயலக) உயர் அதிகாரிகள் மற்றும் வெளிக்கள உத்தியோகதர்கள் இராணுவ உயர் அதிகாரிகள் இச் செயலமர்வில் கலந்துகொண்டனர்.