கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் இன்று (08) கடமையேற்பு!


(பைஷல் இஸ்மாயில்)

கிழக்கு மாகாண விவசாய, கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன கூட்டுறவு அபிவிருத்தி, கூட்டுறவு ஊழியர் மற்றும் மீன்பிடி அமைச்சின் செயலாளராக ஐ.கே.ஜீ.முத்துவண்டா தனது அமைச்சின் கடமைகளை சர்வமத அனுஷ்டானங்களுடன் இன்று (08) பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருமான ஏ.எல்.எம்.அஸ்மி உள்ளிட்ட அமைச்சின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.