மட்டக்களப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மேதின நிகழ்வு

 


( துதி , சுதர்சன் )


தமிழ் தேசிய கூட்டமைப்பின் சர்வதேச மேதின நிகழ்வு மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள மீனிசை பூங்காவில் நேற்று நடைபெற்றது.

மேதின நிகழ்வின் ஆரம்பத்தில் கல்லடி பாலத்திலிருந்து தொழிலாளர்களின் உரிமைகளை வலியுறுத்தும் வகையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பின் மேதின பேரணியில் இலங்கை ஆசிரியர் சங்கம்,இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம்,இலங்கை சமுர்த்தி கணிணி உதவியாளர் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்களும் இணைந்திருந்தன.

இதன்போது மட்டக்களப்பு அரசடியிலிருந்து ஆரம்பித்த பேரணியானது கல்லடிப்பாலம் ஊடாக மீனிசைபூங்கா வரையில் சென்றதுடன் அங்கு நிகழ்வுகள் நடைபெற்றன.

இலங்கை தமிழரசுக்கட்சியின் உப தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பொன்.செல்வராஜா தலைமையில் நிகழ்வுகளில்  மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம்,இரா.சாணக்கியன்,அம்பாறை மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் , மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன்,பிரதி முதல்வர் க.சத்தியசீலன் உட்பட பிரதேசசபையின் தவிசாளர்கள்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்,முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள்,மாநகரசபை உறுப்பினர்கள்,பிரதேசசபை உறுப்பினர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.