நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் நாம் அரசுக்கு சார்பாக இருந்து எமது கடமைகளை நிறைவேற்றி தனி நபர் வருமானத்தை கூட்ட நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசியாவிலே சனத்தொகை குறைந்ததும் அரசாங்க அதிகாரிகள் அதிகம் கொண்ட நாடு இலங்கையாகும். நாடு தரும் நல்ல விடயங்களை அனுபவிக்கும் அதேவேளை தீயவற்றையும் அனுபவிக்கவேண்டும். உலக நாடுகளிலும் இதே பிரச்சினை வந்துள்ள போதிலும் எமது நாட்டை சற்று அதிகம் தாக்கியுள்ளது. குண்டு வெடிப்பு தொடக்கம் தற்போதுவரை அனைவரும் சம்பளம் பெற்றனர். கிராமிய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக வரும் அபிவிருத்திகளை நாம் இயலுமான வரை எமது பக்கத்திற்கு எடுத்து வரவேண்டும். மாற்றம் விரைவில் வரும். அரசியலையும் தாண்டி பொருளாதாரத்தை முன்னேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமிய வீதீகள் மற்றும் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் சினனேசதுரை சந்திரகாந்தன் கருத்து தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சராக பதவியேற்ற பின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முதல் தடைவையாக விஜயம் செய்து கல்குடா தொகுதியின் கிராமிய வீதிகள் மற்றும் உட்கட்டமைப்பு சம்மந்தமான கலந்துரையாடல் ஒன்று வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் திருமதி சோபா ரஞ்சித் தலைமையில் இன்று பேத்தாளை குகநேசன் கலாச்சார மண்டபத்தில் கலந்தகொண்ட போது இராஙஜாங்க அமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியிலும் நெடுஞ்சாலை அமைச்சினால் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்குடன் மட்டு மாவட்டத்தில் கிராமிய வீதிகள் விவசாய வீதிகள் நன்னீர் மீன் பிடியாளர்களின் வீதிகள் என பலதரப்பட்ட முக்கிய வீதிகளின் அபிவிருத்தி தொடர்பாகவும் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புதல் தனி வருமானத்தை கூட்டுதல் தொடர்பாக வும் இங்கு கலந்துரையாடப்பட்டது. தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் பொதுமக்கள் எனப் பலரும் அதில் கலந்துகொண்டனர்.











.jpeg)
