பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட அறிவிப்பு


நாட்டின் தற்போதைய நிலைமைக்கு தீர்வு காண்பதற்கு இளைஞர் சமூகத்தினரின் ஆதரவையும் எதிர்ப்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் சிலருடன் நேற்று  (14) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

அதன்படி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றும் இன்றும் பல இராஜதந்திரிகளை சந்தித்து நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடியுள்ளார்.

அதன்படி, இலங்கைக்கான கொரிய தூதுவர், ஐக்கிய இராச்சியத்திற்கான பிரதி உயர்ஸ்தானிகர், பிரான்ஸ் தூதுவர், இத்தாலிய தூதுவர், நோர்வே தூதுவர், ஐரோப்பிய ஒன்றிய தூதுவர், ஜேர்மன் தூதுவர், சுவிஸ் தூதுவர், அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர், கனடாவிற்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,

"பல நட்பு நாடுகளின் தூதர்கள் மற்றும் பிற பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினேன். பதில் நன்றாக உள்ளது, ஆனால் நாங்கள் தொடர்ந்து அந்த நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும்."