செங்கலடியில் விற்பனைக்காக கலன்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 145 லீற்றர் பெற்றோலுடன் கடை முதலாளி கைது

 

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கொம்மாந்துறை பிரதான வீதியிலுள்ள  சில்லறை கடை ஒன்றில் சட்டவிரோதமாக பெற்றோல் விற்பனை செய்த ஒருவரை 145 லீற்றர் பெற்றோலுடன் நேற்று (20) திங்கட்கிழமை கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹரிச டி சில்வா தெரிவித்தார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹரிச டி சில்வாவின் ஆலோசனைக்கமைய சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சப் இன்பெக்டர் வை.விஜயராஜா தலைமையிலான குழுவினர் சம்பவதினமான நேற்று (20) குறித்த கடையை சுற்றிவளைத்னர்.

இதன் பொது மாறுவேடத்தில் சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர் குறித்த கடைக்கு சென்று பெற்றோல் வாங்குவது போல நடடித்து பெற்றோலை வாங்கிய நிலையில் சுற்றிவளைத்திருந்த பொலிசார் உடனடியாக கடையை முற்றுகையிட்டு சோதனையிட்டபோது கடையின் பின்பகுதியில் கலன்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 145 லீற்றர் பெற்றோலை மீட்டதுடன் கடை முதலாளியை கைது செய்துள்ளதாக அவர் தெரிவித்தார் 

இதில் கைது செய்யப்பட்வரை நேற்று (20) ஏறாவூர் சுற்றுலா நீதிமன்த்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது பெற்றோலை பறிமுதல் செய்து அரச உடமைகுமாறும் அபராதமாக 5 ஆயிரம் ரூபாய் செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.