பெற்றோல் ஏற்றிய கப்பல் நாட்டுக்கு வருவதில் தாமதம் – மின்சக்தி அமைச்சு


பெற்றோல் ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைய சுமார் ஒரு நாள் தாமதமாகும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

40,000 மெட்றிக் டன் பெற்றோல் ஏற்றிய குறித்த கப்பல் இன்று (வியாழக்கிழமை) காலை நாட்டிற்கு வரவிருந்த நிலையில், அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ருவிட்டரில் இன்று வெளியிட்டுள்ள செய்தியிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதன்படி இன்றும் நாளையும் (24) நாடளாவிய ரீதியில் மட்டுப்படுத்தப்பட்ட பெற்றோல் விநியோகிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஆட்டோ டீசல் முழு கொள்ளளவிற்கு விநியோகிக்கப்படும் என்றும் சுப்பர் டீசல் மட்டுப்படுத்தப்பட்ட விநியோகத்தில் இருக்கும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.