மேல் மாகாணத்தின் சில பகுதிகளுக்கு இன்று இரவு 9.00 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது


 இன்று (08) இரவு 9.00 மணி முதல் பின்வரும் பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, நீர்கொழும்பு, களனி, நுகேகொடை, கல்கிசை, மத்திய கொழும்பு, வட கொழும்பு மற்றும் தென் கொழும்பு போன்ற பகுதிகளில் ஊரடங்கு அமுலுக்கு வரவுள்ளது