முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் !



நாட்டில் தற்போது நிலவும் 'கொவிட்-19' நிலைமையை கருத்தில் கொண்டு, பொது இடங்கள், உள்நாட்டு கூட்டங்கள் மற்றும் பொது போக்குவரத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதன்படி, உள்ளக இடங்கள், பொது ஒன்றுகூடல்களில் இருக்கும்போதும், பொதுப்போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தி பயணங்களில் ஈடுபடும்போதும் முகக்கவசம் அணியுமாறு பொதுமக்களை சுகாதார அமைச்சு கோரியுள்ளது.

இதேவேளை, கடந்த 10 நாட்களில் நாட்டில் 500 க்கும் அதிகமான கொவிட் தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்ட நிலையில், நேற்று 25 ஆம் திகதி திங்கட்கிழமை மாத்திரம் 75
புதிய கொவிட் தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே நாட்டின் தற்போதைய கொவிட்-19 பரவலை கருத்திற் கொண்டு மீண்டும் முகக்கவசங்களை அணியுமாறு சுகாதார அமைச்சு கடுமையாக பரிந்துரையை முன்வைத்துள்ளது.