காதலியின் குறும் தகவலையடுத்து இளைஞன் தூக்கிட்டு தற்கொலை - களுவாஞ்சிகுடியில் சம்பவம் !களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட குறுமன்வெளி பிரதேசத்தில் இளைஞன் ஒருவர் தனக்குத்தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அரசடி வீதி குருமன்வெளி-12 பிரதேசத்தைச் சேர்ந்த (19) வயதுடைய சசிக்குமார் கஜானணன் என்பவரே தனக்குத்தானே தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டவராவார்.

சம்பவ தினத்தன்று வழமைபோல் காலை,மதிய உணவருந்தி விட்டு வெளியில் சென்ற போது குறித்த நபரின் தாயார் அவரின் உறவினர் வீட்டுக்கு சென்று வீடு திரும்பியபோது வீட்டின் அறையின் கதவு பூட்டப்பட்டிருந்ததனை அவதானித்த தாய் அயலவர்களின் உதவியுடன் வீட்டின் கதவினை உடைத்து உட்சென்ற போது குறித்த இளைஞன் தூக்கிட்ட நிலையில் காணப்பட்டதனையடுத்து தூக்கில் இருந்து மீட்டெடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்துள்ளதனை கடமையில் இருந்த வைத்தியர்கள் உறுதிப்படுத்தியதாகவும் , குறித்த இளைஞன் அதே பிரதேசத்தில் உள்ள யுவதி ஒருவரை காதலித்து வ்ந்ததாகவும் யுவதியின் தொலைபேசியில் இருந்து அனுப்பப்பட்ட குறுந் தகவலின் பின்னரே அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

களுவாஞ்சிகுடி நீதிமன்ற நீதிவான் ஜே.வி.ஏ.ரஞ்சித்குமார் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்ப இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தினை பார்வையிட்ட பின்னர் சடலத்தை பிரேத பிரிசோதனையின் பின்னர் சடலத்தினை உறவினர்களிடம் ஒப்படைககும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.