மட்டக்களப்பில் சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலில் இரத்ததான முகாம்!



(சிஹாரா லத்தீப் )
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் இரத்த குறைபாட்டினை நிவர்த்திக்கு முகமாக சுகாதார அமைச்சின் வழி காட்டுதலில் மட்டக்களப்பு நகர ஜாமிஉஸ்சலாம் ஜும்மா பள்ளி வாசல் மற்றும் சலமா பவுண்டேஷன் என்பன இணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று இன்று மட்டக்களப்பு நகர ஜாமியுஸ் ஸலாம் பள்ளிவாயலில் இடம்பெற்றது .

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் பிரதம அதிதியாக கலந்து  கொண்டு  இந்த மாபெரும் இரத்ததான முகாமை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார். 

இந்நிகழ்வில் மட்டக் களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர். எம். பி மதன் மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஆர் குமாரஸ்ரீ, ஜாமீயுஸ் சலாம் ஜும்மா பள்ளிவாசலின் நிர்வாகத் தலைவர் எம்.எச்,எம். சியாம் உட்பட பல சமய பிரமுகர் கள் மற்றும் பொது நல அமைப்பின் தலைவர்கள் பலரும் இங்கு பிரசன்னமாகியிருந்தனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி வைத்தி யர்கள் தாதியர்கள் மற்றும் இரத்த வங்கி சேவை யாளர்கள் இந்த இரத்தம் சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இங்கு சேகரிக்கப்படும் இரத்தம் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் மகப்பேறு, தலசீமியா டெங்கு நோய் .புற்றுநோய் மற்றும் அவசரசத்திர சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

குறித்த இரத்த தானத்தில் மட்டக்களப்பு நகரில் இயங்கும் வர்த்தக நிலையங்களில் .வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்த தானம் வழங் கியமை குறிப்பிடக்கூடிய விசேட அம்சமாகும்.