இலங்கை பட்டய ஊடக தொழில்வாண்மையாளர்கள் நிறுவனத்தை ஸ்தாபிக்க அரசாங்கம் தீர்மானம்!


ஊடகத் துறையில் பணிபுரிகின்ற ஊடகவியலாளர்களின் தொழில்வாண்மையை அதிகரிக்கும் நோக்கில் இலங்கை பட்டயம் பெற்ற ஊடகவியலாளர்களின் நிறுவனத்தை தாபிப்பதற்காக கடந்த ஆண்டு ஒக்டோபர் 5 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள வழிநடாத்தல் குழுவால் குறித்த நிறுவனத்தைத் தாபிப்பதற்கு ஏற்புடைய வகையில் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தின் அடிப்படையில் சட்ட வரைஞர் திணைக்களத்தின் மூலம் சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் முன்மொழியப்பட்டுள்ள 'இலங்கை பட்டயம் பெற்ற ஊடகவியலாளர் நிறுவனம்' எனும் பெயருக்குப் பதிலாக முன்மொழியப்பட்டுள்ள நிறுவனத்தின் பெயர் 'இலங்கை பட்டய ஊடக தொழில்வாண்மையாளர்கள் நிறுவனம்' எனத் திருத்தம் செய்வதற்காக வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.