நெல் கொள்வனவுக்காக நெல்லின் அதிகபட்ச விலை நிர்ணயம் !நெல் சந்தைப்படுத்தல் சபை இந்த ஆண்டு நெல் கொள்வனவுக்காக ஒரு கிலோ நெல்லுக்கான அதிகபட்ச விலையை நிர்ணயித்துள்ளது.

இதன்படி, நாட்டு நெல் ஒரு கிலோ 120 ரூபாவுக்கும், சம்பா மற்றும் பச்சையரிசி நெல் கிலோ ஒன்று 125 ரூபாவுக்கும், கீரி சம்பா நெல் கிலோ ஒன்று 130 ரூபாவுக்கும் கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார் .

நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான பணத்தை பயன்படுத்தி நெல்லை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் புதிய பருவத்தில் நெல் அறுவடையை விவசாயிகளுக்கு அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்வதும், நெல் சந்தைப்படுத்தல் சபையுடன் இணைந்து சந்தையில் அரிசியின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கு பங்களிப்பதும் இதன் நோக்கமாகும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.