தூ க் கி ல் தொ ங் கி ய நி லை யில் இளைஞன் சடலமாக மீட்பு - கோவில் போரதீவில் துயரம் !


(மண்டூர் ஷமி)
களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கோவில்போரதீவு பிரதேசத்தில் இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நேற்று (22) இடம் பெற்றுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்மந்தர் வீதி கோவில்போரதீவு பிரதேசத்தைச் சேர்ந்த (21) வயதுடைய சுந்தரலிங்கம் ஹரிஜ்ராஜ் என்பவரே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டவராவார்.

சம்பவ தினத்தன்று வழக்கம் போல் தனது வேலைகளை முடித்து விட்டு தனது வீட்டுக்கு வந்து இரண்டாம் மாடியில் உள்ள தனது படுக்கை அறைக்கு தூக்கத்திற்காக சென்றதாகவும் பின்னர் மறுநாள் காலை அவரின் மைத்துணன் ஒருவர் வீட்டுக்கு வந்து அழைத்தபோது எவ்வித சத்தமும் இன்றி இருந்த நிலையில் குறித்த நபரின் படுக்கை அறைக்கு சென்றபோது தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் தூக்கில் இருந்து மீட்டெடுத்தபோது

மரணமடைந்திருந்ததாகவும். குறித்த இளைஞன் கடந்த இரு வருடங்களாக இரு வீட்டாரின் சம்மதத்துடன் யுவதி ஒருவரை காதலித்து வருவதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

களுவாஞ்சிகுடி நீதிமன்ற நீதிவான் ஜே.வி.ஏ.ரஞ்சித்குமார் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்டார். பிரேத பரிசோதனையின் பின்னர் பிரேதத்தை நெருங்கிய் உறவினர்களிடம் ஒப்படைக்கும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டார். 

சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.