சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த ஆறு பேர் கைது!


இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக வெளிநாடொன்றுக்கு செல்ல முயற்சித்த அறுவர் தலைமன்னார் பகுதியில் வைத்து, கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (27) காலை தலைமன்னார்- வெலிப்பாறையை அண்டிய கடற்பரப்பில் கடற்படையினர் விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போதே, குறித்த ஆறு பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடல்மார்க்கமாக முன்னெடுக்கப்படும் இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக கடற்படையினர் வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் இதற்கமையவே தலைமன்னார் பகுதியில் வைத்து, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் கடற்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களுள் 18 வயதுக்கு மேற்பட்ட இரண்டு இளைஞர்களும், ஒரு பெண்ணுடன் மூன்று சிறுவர்களும் உள்ளடங்குவதாகத் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா மற்றும் மொறவெவ பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்றும்மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.