ஸ்ரீலங்கன் கின்டர்காடன் பாலர் பாடசாலையின் ஆசிரியர் தின வைபவம் பாலர் பாடசாலையின் அதிபர் திருமதி ஜனார்த்தனி மகிழ்நம்பி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு வலய முன்பிள்ளைப் பருவ பராமரிப்பும் அபிவிருத்திக்கும் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.முத்துராஜா புவிராஜா அவர்களும் மண்முனை வடக்குப் பிரதேச செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.திருச்செல்வம் மேகராஜா அவர்களும் ஓய்வுநிலை ஆசிரியை திருமதி எஸ். சிவலிங்கம் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.
ஆரம்ப நிகழ்வாக பிள்ளைகளினால் மாலை அணிவிக்கப்பட்டு மலர்கொத்துக்களும் வழங்கி பாண்ட் வாத்திய இசையுடன் அதிதிகளும் ஆசிரியர்களும் வரவேற்கப்பட்டனர். மங்கல விளக்கேற்றல், இறை வணக்கம், ஆகிய சம்பிரதாய நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இங்கு ஆசிரியர்கள் தங்கள் ஆற்றல் திறமைகளை வெளிக்கொணர்ந்து பிள்ளைகள், பெற்றோர்களை மகிழ்விக்கும் வகையில் ஆடலும் பாடலும், நாடகம் போன்ற கலை நிகழ்வுகளை அங்கு அரங்கேற்றியிருந்தனர்.
நிகழ்வின் நிறைவில் பிள்ளைகளும் பெற்றோர்களும் ஆசிரியர்களுக்கு மாலை அணிவித்ததுடன் வெகுமதிகளையும் வழங்கி அவர்களைக் கௌரவித்தினர்.
ஆசிரியர் தின நிகழ்வுகள் சிறப்பான முறையில் பெற்றோர்களின் பூரண ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.