சில பொருட்களின் இறக்குமதி தடையை தளர்த்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு !
சில பொருட்களின் இறக்குமதி தடையை தளர்த்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று (புதன்கிழமை) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கையெழுத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. குளிர்சாதன பெட்டிகள், சலவை இயந்திரங்கள், குளிரூட்டி உள்ளிட்ட பொருட்களுக்கே இவ்வாறு இறக்குமதி தடை நீக்கப்பட்டுள்ளது.