(மண்டூர் ஷமி)
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ்பிரிவிற்குட்பட்ட இருதயபுர பிரதேசத்தில் இளம் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று (17) இடம்பெற்றுள்ளதான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
11ம் குறுக்கு இருதயபுரம் (மேற்கு) பிரதேசத்தை உடைய (19) வயதுடைய சூரியகுமார்-துவாரகா என்பவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவராவார்.
குறித்த யுவதி இரு வீட்டாரின் சம்மதற்திற்கிணங்க நீண்ட காலங்களாக இளைஞன் ஒருவரை காதலித்து வருவதாகவும் தனது காதலன் தொழிலின் நிமிர்ந்தம் வெளிநாடு செல்லவிருந்த நிலையில் அதனை மறுத்தாகவும் சம்பவ தினத்தன்று வழக்கம் போல் தனது வீட்டின் அறையினுள் நித்திரை செய்ய சென்றதாகவும் பின்னர் மறுநாள் யுவதியின் தாயார் வீட்டின் அறையின் கதவினை திறந்து பார்த்தபோது குறித்த யுவதி தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் காணப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் பீற்றர் போல் அவர்களின் உத்தரவிற்கமைவான சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சம்ப இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். மட்டக்களப்பு பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.