மட்டக்களப்பில் கட்டுப்பணம் செலுத்திய தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி!!


(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) 


தேர்தல் திணைக்களத்தினால் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக கட்டுப்பணம் செலுத்தும் காலம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணத்தினை செலுத்தி வருகின்றனர்.

அதற்கமைவாக இன்றைய தினம் (12) திகதி தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையிலான கட்சியினர் மட்டக்களப்பு தேர்தல் அலுவலகத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தினை செலுத்தினர்.

இதன்போது காத்தான்குடி தவிர்ந்த ஏனைய உள்ளூராட்சி சபைகளுக்கான கட்டுப்பணத்தினை கட்டியுள்ளனர். கட்சியின் பொது செயலாளர் பூ.பிரசாந்தன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் இதன்போது சமூகமளித்துள்ளனர்.