சின்ன ஊறணி சின்னஞ்சிறு கல்விமான்கள் முன்பள்ளியின் புதிய பிள்ளைகள் வரவேற்று கௌரவிக்கும் வைபவம் - 2023

(சித்தா)

புதிய பிள்ளைகளை வரவேற்று கௌரவிக்கும் வைபவம் இன்று காலை மட்டக்களப்பு சின்ன ஊறணி சின்னஞ்சிறு கல்விமான்கள்  முன்பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியை ஜே.எம்.வயலட்  அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இதில் முதன்மை அதிதியாக மட்டக்களப்பு வலய முன்பிள்ளைப் பருவ பராமரிப்பும் அபிவிருத்திக்கும் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.முத்துராஜா புவிராஜா அவர்களும் சிறப்பு அதிதியாக மண்முனை வடக்குப் பிரதேச செயலக முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.திருச்செல்வம் மேகராஜா அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இதன்போது பெற்றோர்களும் சமூகமளித்திருந்தனர்.

வைபவத்தின்போது சிரேஷ்ட பிள்ளைகள் அதிதிகளையும் புதிய பிள்ளைகளையும் மலர்மாலை அணிவித்து அவர்களை வரவேற்றனர். மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம் போன்ற சம்பிரதாய நிகழ்வுகளும் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து அதிதிகளினால் மரக்கன்றும் முன்பள்ளி வளாகத்தில் நடப்பட்டது.

பிள்ளைகள் தமது ஆற்றல் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் ஆடல் பாடல்இ நாடகம் போன்ற நிகழ்ச்சிகளும் அரங்கேறின. 

மேலும் அனைத்து பிள்ளைகளுக்கும் பயன்தரு மரக்கன்றுகள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.

மிகச் சிறப்பான முறையில் இந்நிகழ்வை பெற்றோர்களின் பூரண ஒத்துழைப்புடன்  ஒழுங்கமைத்து செயற்படுத்திய முன்பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் ஏனைய ஆசிரியர்களுக்கும் பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தமையும்  குறிப்பிடத்தக்கதாகும்.