மட்டக்களப்பில் சிறுவர்களின் முதலாவது வாகன அணிவகுப்பு!

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) 

மட்டக்களப்பு முன்வருடப் பாடசாலையின் முதலாவது வாகன அணிவகுப்பு எதிர்வரும் மே 27ஆம் திகதி சனிக்கிழமை மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.

இவ்வணிவகுப்பில் ஒவ்வொரு சிறுவர் சிறுமியரும் தமது உறவினர்களுடன் மிதிவண்டி, முச்சக்கரவண்டி மற்றும்  மோட்டார் சைக்கிள்கள் அணிவகுப்பில் ஈடுபடவுள்ளதுடன் ஏனையவர்கள் நடை பவனியாகவும் செல்லவுள்ளனர். இதன்போது; சுற்றாடலுக்கு உகந்த வாகனங்கள் மாத்திரம் பயன்படுத்தப்படவுள்ளன.

இவ்விழிப்புணர்வு அணிவகுப்பு சகல பிள்ளைகளின் உடல் மற்றும் உள வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் விதமாக மட்டக்களப்பு முன்வருடப் பாடசாலை மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் பெற்றோர்கள்  இணைந்து  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மிகவும் சிறிய பிள்ளைகள் தமது பெற்றோர்களின் அருகில் தள்ளுவண்டிகளைத் தள்ளிச் செல்லவுள்ளார்கள். இது அப்பிள்ளைகள் வீட்டினுள் அமர்ந்து தொலைக்காட்சி அல்லது கையடக்கத் தொலைபேசி மற்றும் கணனி போன்றவற்றில் தமது நேரத்தை செலவிடுகிறார்கள்.

இவ்வாழ்க்கை முறையினால் எமது சிறுவர்களின் சுதந்திரம், நம்பிக்கை, தொடர்பாடல் மற்றும் வளர்ச்சியை போன்றவை பாதிப்படைகின்றது.

அதனால் இந்நிகழ்வு வெளியே பெற்றோருடன் சேர்ந்து பொழுது போக்குவதற்கு உதவியளிக்கும் என நம்பப்படுகிறது.  

இவ்வணிவகுப்பில்; ஆரோக்கியமாகப் பங்குபற்றும் சகல சிறுவர்களுக்கும் பதக்கங்கள் மற்றம் சான்றிதழ்களும் சிற்றுண்டிகளும்  வழங்கப்படவுள்ளமை சிறப்பம்சமாகும்.