மட்டக்களப்பு மாவட்டத்தில் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரிப்பு 3 மாதங்களில் 33 முறைப்பாடுகள்

sexதிருக்கோவில் நிருபர் : மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக 33 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட இணைப்பாளர் தெரிவித்தார். இம்மாவட்டத்தில் பெண்கள்,சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கைகள் கடந்த மூன்று மாதத்தில் அதிகரித்துக் காணப்படுகின்றன.இதில் குடும்ப முரண்பாட்டு பாலியல் துஷ்பிரயோகம்,உறவுமுறை பாலியல் துஷ்பிரயோகம்,சிறுவர் மீது பாலியல் துஷ்பிரயோகம்,பலாத்கார பாலியல் துஷ்பிரயோகம் என்பவை தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இவ்வருடம் ஜனவரி மாதத்தில் ஒன்பதும் பெப்ரவரி மாதத்தில் எட்டும் மார்ச் மாதத்தில் 16 முறைப்பாடுகளுமாக மொத்தம் 33 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. கடந்த வருடம் முழுவதும் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக 154 முறைப்பாடுகளே கிடைத்துள்ளன.இதனுடன் ஒப்பிடும்போது இந்த வருடம் முதல் மூன்று மாதத்தில் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்தே காணப்படுகின்றன.

இந்நிலையை இல்லாதொழிக்க பொதுமக்கள் சமூகத்தலைவர்கள்,அரச சார்பற்ற நிறுவனங்கள்,மதஸ்தலங்கள் போன்றவை ஒன்றிணைந்து பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டியது அவசியமெனவும் தெரிவித்தார்.