மட்டக்களப்பு ராமகிருஸ்ண மிஸன் சுவாமி அஜராத்மானந்தஜி மகாராஜ் அவர்கள் இறைபாதம் அடைந்தார்

ராமகிருஸ்ண மிஸன் சுவாமி அஜராத்மானந்தஜி மகாராஜ் அவர்கள் காலமாகி விட்டார்கள். நேற்று மாலை 6.45 மணியளவில் தனியார் வைத்தியசாலையில் இவர் காலமானார். இவர் சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு வயது 61. இவரது தகனக் கிரியைகள் இன்று மாலை 4மணிக்கு கல்லடி உப்போடையில் உள்ள சாரதா மகளிர் இல்ல வளாகத்தில் இடம்பெற உள்ளதாக ராமகிருஸ்ண மிஸனைச் சேர்ந்த சுவாமி ஞான மயானந்தாஜி அவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள்.

சுவாமி அஜராத்மானந்தஜி அவர்கள் கடந்த பல வருடங்களாக மட்டக்களப்பு ராமகிருஸ்ண மிஸனிலேயே சேவையாற்றியிருக்கின்றார். மிகவும் நெருக்கமான கால கட்டங்களில் கடந்த கால யுத்த காலப் பகுதியில் இவருடைய சேவை மக்களுக்கு பெரிதும் சிறந்ததாக அமைந்திருந்தது. சமாதானக் குழுவிலும் இடம்பெற்று தனது காத்திரமாக பங்களிப்பை வழங்கிய சுவாமிஜி மிகவும் திறமைசாலி. இவரது மறைவினால் மட்டக்களப்பு மிகவும் சோகத்தில் ஆழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.