12 ராசிகளுக்குமான சித்திரை புத்தாண்டு ராசி பலன்கள் 2012


  தமிழ் வருடங்கள் 60 ஆகும். பிரபவ முதல் அக்ஷய வரை. இந்த வரிசையில் நந்தன 26-ஆவது வருடம் ஆகும். திருக் கணிதப்படி 13-4-2012, வெள்ளிக்கிழமை, தேய்பிறை அஷ்டமி, உத்திராட நட்சத்திரம், சித்த யோகம், கெளவ கரணம், இரவு 7 மணி, 11 நிமிடத்துக்குத் தமிழ்ப் புத்தாண்டு நந்தன வருடம் பிறக்கிறது.
சித்திரை புத்தாண்டு ராசி பலன் 2012
 நந்தன வருட பாடல்:
 நந்தனத்தின் மாரியறு நாடெங்கும் பஞ்சம் மிகும் நந்துமுயிர் நோயால் நலியுமே அந்தரத்தின் மீன் உதிரும் தூமம் எழும் மிக்க கெடுதி உண்டாம் கோன் மடிவன் என்றே நீ கூறு.
 பாடலின் விளக்கம்: இந்த நந்தன வருடத்தில் மழையும் விளைச்சலும் குறைந்து நாட்டில் பஞ்சம் அதிகரிக்கும். நோயால் உயிர்கள் நலியும். விண்ணிலிருந்து நட்சத்திரங்கள் பூமியை நோக்கி வரும். தூம கேது தோன்றும். அரசனுக்கு மரணம் உண்டாகும். இக்காலத்தில் அரசன் இல்லாததால் அரசாங்கத்தில் உயர் பொறுப்பில் உள்ள தலைவர்களுக்கு ஆபத்து உண்டாகும்.

இங்கே உங்களது ராசியின் மேல் கிளிக் செய்து உங்களது ராசிக்குரிய பலனை பாருங்கள் 
    
  
  
  


 நந்தன வருட ஆரம்ப கிரகநிலை: துலா லக்னம், லக்னத்தில் சனி (வ), இரண்டில் ராகு, நான்கில் சந்திரன், ஆறாமிடத்தில் புதன், ஏழில் சூரியன், குரு, எட்டில் சுக்கிரன், கேது, பதினொன்றில் செவ்வாய் (வ). யோக காரகரான சனி லக்னத்தில் அமர்ந்து குருவும் சூரியனும் லக்னத்தைப் பார்ப்பதால் தொழில் வளர்ச்சி மேலோங்கும்.
பொது நலப்பணிகள் நிறைவேறும். ரியல் எஸ்டேட் மூலம் வருமானம் அதிகரிக்கும். கறுப்பு நிறப்பொருட்கள், விவசாயம், நிலக்கரி, எரிபொருள், வானியல் ஆராய்ச்சி, எண்ணெய் வகையறாக்கள், தாதுப் பொருட்கள், தோல் பொருட்கள் மூலம் ஆதாயம் அதிகம் கிடைக்கும். புதிய தொழிற்சாலைகள் தோன்றும். வேலை வாய்ப்பு பெருகும். கால்நடைகள் அபிவிருத்தி ஆகும். 2-ல் ராகு இருப்பதால் உள்நாட்டில் குழப்பம் விளையும்.

பொருளாதாரப் பற்றாக்குறை உண்டாகும். திருட்டு பயம் ஏற்படும். புதன் 6-ல் இருப்பதால் வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். குருவும் சூரியனும் 7-ல் இருப்பதால் அரசாங்கக் கொள்கைகளுக்கு வரவேற்பு அதிகமாகும். இராணுவம், மருத்துவம், இரயில், தபால், தந்தி, தொலைபேசி, பத்திரிகை, காடு வளம், போன்றவற்றில் முன்னேற்றம் காணலாம்.

 ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் சம்பந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு விருதுகளும் பதக்கங்களும் கிடைக்கும். பிற நாட்டுத் தொடர்பு, பேச்சு வார்த்தை, ஒப்பந்தங்கள் சிறப்பாக நிறைவேறும். 8-ல் சுக்கிரனும் கேதுவும் இருப்பதால் கலைத்துஐயினருக்கு வரவேற்பு அதிகரிக்கும். பெண்களுக்கு மனக்குழப்பம் உண்டாகும். விரைவில் பரவும் இனம் புரியாத வியாதியால் பாதிப்பு உண்டாகும். 11-ல் செவ்வாய் இருப்பதால் தன யோகம் உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணலாம். புதிய பொருளாதாரக் கொள்கைகளும் வெளியிடப்படும். ராஜக்கிரகங்கள் வலுப்பெற்றிருப்பதால் அரசாங்கத்துக்குப் பல வழிகளில் வருவாய் வந்து சேரும்.

 அரசு அதிகாரிகளுக்குப் பெயரும் புகழும் கூடும். அரசு கொள்கைகளுக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரிக்கும். 7-ஆம் வீட்டோனும் லாபாதிபதியும் பரிவர்த்தனை பெற்றிருப்பதாலும், 7-ஆம் வீட்டோனை குரு பார்ப்பதாலும், சுக்கிரன் தன் சொந்த வீட்டில் இருப்பதாலும் திருமண விகிதம் உயரும். அயல்நாட்டு வர்த்தகம் லாபம் தரும். புதிய ஒப்ப்ந்தங்கள் கையெழுத்தாகும். பயணம் சம்பந்தமான துறைகளால் அதிகம் ஆதாயம் கிடைக்கும். மின்சாரம், நெருப்பு, ஆயுதங்கள், வெடிப் பொருட்கள், தளவாடங்கள் மூலம் ஆதாயம் பெருகும். மொத்தத்தில் இந்த தமிழ்ப்புத்தாண்டில் நாடு சுபிட்சமாக இருக்கும். ராகு, கேது நிலை சரியில்லாததால் அந்நியர்களால் பிரச்னைகள் ஏற்படும் எனத் தெரிவதால் நாடெங்கிலும் சர்ப்ப கிரகங்களுக்கு பிரீதி, பரிகாரங்களைச் செய்வது நல்லது

. வாசகர்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
12ராசிகளுக்குமான