திருக்கோவில் பிரதேசத்தில் வெள்ளத்தினால் 8 பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன


(தம்பையா)
அம்பாரை மாவட்டத்தில் சீரற்ற கால நிலையினால் சில தினங்களாக தொடர்ந்து பெய்துவரும் அடை மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் 8   பாடசாலைகள் மறு அறிவித்தல்வரை இன்று வியாழக்கிழமை தொடக்கம்  மூடப்பட்டுள்ளதாக திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன் தெரிவித்தார்

திருக்கோவில் கல்வி வலயத்தின் கீழ் உள்ள திருக்கோவில் கோட்டக் கல்வி வலயத்தில் தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம், திருக்கோவில் மெதடிஸ்த தமிழ் கலவன் பாடசாலை, பரமேஸ்வரா வித்தியாலயம், தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயம், கனகரெத்தினம் வித்தியாலயம்,
விநாயகபுரம் மகா வித்தியாலயம், கஞ்சிக்குடியாறு கணேசா வித்தியாலயம் மற்றும் ஆலையடிவேம்பு கோட்டக் கல்வி வலயத்தின் கீழ் உள்ள கோளாவில் பெருநாவலர் வித்தியாலயம் ஆகிய 8 பாடசாலைகள் வெள்ளம் காரணமாக இன்று மூடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்