இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய அம்பாரை மாவட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் அவர்கள் இந்த பாடசாலையில் இருந்து முதல் தடவையாக 5 மாணவர்கள் சித்தியடைந்ததை பார்த்ததும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. முதலில் இந்த பாடசாலை அதிபர் ஆசிரியர்களுக்கு எனது நன்றியை தெரிவிப்பதோடு இந்த மாணவச்செல்வங்களின் தாய் தந்தையரையும் பாராட்டுகின்றேன். இதே போன்று எதிர்வரும் காலங்களில் இந்த பாடசாலையில் கல்வி பயில்கின்ற மாணவர்கள் அதைவிடவும் கூடுதலாக சித்தியடைவதற்கான முயற்சியை எடுக்க வேண்டும்.
இந்த சேணைக்குடியிருப்பு கிராமம் கடந்த கால யுத்தத்தின் போது மிகவும் பாதிக்கப்பட்டது 2004 ம் ஆண்டு நிகழ்ந்த சுனாமி அனர்த்தத்தின்போது பாதிக்கப்பட்டு அவதியுற்ற மக்களுக்கு ஆதரவு கொடுத்து தங்குவதற்கு வசதிகளும் ஏற்படுத்தி கொடுத்த இந்த பாடசாலையை ஒருபோதும் என்னால் மறக்க முடியாது. எனது சொந்த நிதி, மற்றும் மாகாணசபை நிதி ஒதுக்கீடுகள் மூலமாக கல்விக்கே கூடிய நிதியை செலவு செய்து வருகின்றேன். எனது இனத்திடம் எஞ்சி இருப்பது கல்வி ஒன்றே எதிர்வரும் காலங்களில் கல்வி வளர்ச்சிக்காக புதிய திட்டங்களை வகுத்து அதனூடாக எமது சமூகம் கல்வியில் கூடிய கவனம் எடுத்து முன்னேறுவதற்கு வழிவகுப்பேன் எனவும் கூறினார்.