மூன்றாவதுகண் உள்ளூர் அறிவுத்திறன் செயற்பாட்டுக்குழு நண்பர்களும் பாரம்பரிய இசைக்கலைஞர்களும் இணைந்து நிகழ்த்திய இசைநிகழ்வு
மூன்றாவதுகண் உள்ளூர் அறிவுத்திறன் செயற்பாட்டுக்குழு முன்னெடுக்கும் கலைச்செயற்பாடுகளின் ஒருஅம்சமாகமுதன்முறையாக“பாரம்பரிய இசைக்கருவிகளின் ஒன்னிணைவால் உருவானவாத்திய இசைநிகழ்வும் வேடர் சமூககலை நிகழ்வும்”மட்டக்களப்புமாமாங்கேஸ்வரர் ஆலத்தில் நடைபெற்றது.
இவ்வாலயத்தில் 23.07.2014 அன்றுநடைபெற்ற 7ம் நாள் திருவிழாக்காரரான உடையார் பூசைக் குழுவினரின் அனுசரனையில் இடம்பெற்றது. பட்டெடுத்துபரும் நிகழ்விலும் சுவாமிவெளிவீதிசுற்றும் நிகழ்விலும் இப்பாரம்பரிய இசைநிகழ்வும்,வேடர் சமூகசடங்குநிகழ்வும் சிறப்புற நிகழ்ந்தமை அனைவரையும் கொண்டாட்டத்திலும் இன்பத்திலும் ஆழ்தியது.
இந்நிகழ்வில் தப்புவாத்தியம், பறை,மத்தளம்,தாளம், சவணிக்கை, கொம்பு,சங்கு,வேடர் சமூககொட்டுவாத்தியம் முதலானவை பொருமிதத்துடன் பயன்படுத்தப்பட்டது. இந்த இசைக்கருவிகளின் சங்கமத்தின்முழக்கத்தினால் பட்டெடுத்தலும் சுவாமிவீதியுலாவருதலும் பக்கதர்களின் வரவேற்புடன் நடைபெற்றமைநாம் நமதுபாரம்பரியத்தைவலுவாகப் போணும் உந்துதலைக் கொடுத்தது.
மூன்றாவதுகண் குழுவினர் வேடர் சமூகத்தினகலைஆற்றுகைகளையும் அவர்களதுசூழல்சார் வாழ்தலையும் பார்த்து,வெளிப்படுத்திவரும் சந்தர்ப்பத்தில் அவர்களதுவாழ்வியலின் ஒன்றான கலையாற்றுகையை சுவாமிவீதியுலாஊர்வலத்தில் செய்துகாட்டியமைதமிழரின் மூதாதயரை மாண்புசெய்வதாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.



.jpg)






.jpg)

