கணேஷா மகா வித்தியாலயத்துக்கு பேண்ட் வாத்தியங்கள் வழங்கிய மாகாண சபை உறுப்பினர் இராஜேஸ்வரனுக்கு வரவேற்பு

கல்முனை பிரதேசத்தில் பிரபல பாடசாலைகளுள் ஒன்றான சேனைக்குடியிருப்பு கணேஷா மகா வித்தியாலயத்துக்கு  அண்மையில் பேண்ட் வாத்தியங்கள் வழங்கிய மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரனுக்கு அவர்களுக்கு பாடசாலை பேண்ட் வாத்திய குழுவினரின் முதல் வரவேற்பு அளிக்கப்பட்டது.


இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாகாண சபை உறுப்பினர் அப்பாடசாலையில் ஐந்தாம் தர புலமை பரீட்சையில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார்.

அங்கு உரையாற்றிய மு.இராஜேஸ்வரன் அவர்கள்,

மாணவர்களுக்கு பல அறிவுரைகளை கூறியதுடன், பேண்ட் வாத்தியங்கள் வழங்கிய சிறு கால இடைவெளிக்குள் மாணவர்கள் அவற்றை பயின்று, என்னை வரவழைத்து வரவேற்ப்பு நிகழ்வின் போது அதனை இசைத்தையிட்டு மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். அத்துடன் ஆசிரியர்கள் மாணவர்களின் கற்றல், விளையாட்டு திறமைகளை மேலும் வளப்படுத்த ஆசிரியர்கள் மேலும் கடுமையாக உழைக்க வேண்டும். எமது எதிர்கால சமூகத்தை சிறந்த முறையில் உருவாக்கும் பொறுப்பும், கடமையும் தங்களிடமே உள்ளது. மாணவர்களுக்கு கல்விக்கான உதவிக்கு என்றும் என் வாசல் கதவுகள் திறந்தே இருக்கும் என்று மாகாண சபை உறுப்பினர் மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் உரையாற்றினார்.

தொடர்புடைய செய்தி  : http://www.battinews.com/2014/09/blog-post_554.html