இச்சம்பவம் இன்று மாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் செங்கலடியைச் சேர்ந்த 17 வயதுடைய சரவணபவன் சங்கீதன் என்ற இளைஞனே பலியாகியுள்ளார்.
15 வயதுடைய கந்தசாமி பிரேமகாந்தன் எனும் செங்கலடியைச் சேர்ந்த மற்றொரு இளைஞன் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
ஏறாவூர் பிரதேச தீடீர்மரண விசாரணையதிகாரி எம்எஸ்எம் நஸிர் மரணவிசாரணை மேற்கொண்டார்.
குறித்த நபர்கள் இருவரும் கைத்தொலைபேசியில் பாடலை ரசித்துக் கொண்டு தண்டவாளத்தில் படுத்திருந்தவேளை கொழும்பு நோக்கிச் சென்ற எண்ணெய் ரயில் வண்டியில் மோதுண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஏறாவூர் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.











.jpg)

