(பேரின்பராஜா சபேஷ்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் கிழக்கு மாகாண
முதலமைச்சராக பரிந்துரை செய்யப்பட்டுள்ள ஹாபீஸ் நஸீர்
அஹமட்டிற்கு ஆதரவளிப்பது தொடர்பில் தமது கட்சி எந்தவொரு
தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லையென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
அறிவித்துள்ளதோடு கிழக்கு மாகாண சபை ஆட்சியில் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் வகிபாகம் மிகவும் அத்தியாவசியம் என வலியுறுத்தியுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவிக்கையில்,
2012ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண தேர்தலின் போது
எமது கட்சியிலிருந்து மூன்று உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள்
சுதந்திரன கூட்டமைப்பினூடாக போட்டியிட்டு
வெற்றிபெற்றிருந்தனர். அதன் பின்னர் கிழக்கு மாகாண சபை உறுப்பினராக
பதவிவகித்த அமீர் அலி எமக்கு அரசரங்கத்தால் அளிக்கப்பட்ட
வாக்குறுதியின் பிரகாரம் வழங்கப்பட்ட தேசியப்பட்டியல்
பாராளுமன்ற ஆசனத்திற்கான அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்டார். அதனை
அடுத்து எமது அங்கத்துவம் தற்போது இரண்டாகவுள்ளதோடு
அவ்வெற்றிடத்திற்கு எமது கட்சியின் சார்பாக புதிதாக ஒருவரும்
பதவியேற்றவேண்டியுள்ளது. இந்நிலையில் நாம் மு.காவுடன் இவ்விடயம்
தொடர்பாக பல தடவைகள் பேச்சுவார்த்தைகள் நடத்தியிருந்தோம்.
முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் கிழக்கு மராகாணத்திற்கு
நியமிக்கப்படவேண்டும் என்பது எமது விரும்பமாகவும் இருந்தது.
இருப்பினும் மு.கா இவ்விடயம் தொடர்பில் எம்மிடம் எவ்விதமான
கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் புதிய
முதலைமைச்சருக்கான பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருக்கின்றது.
அவருக்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது குறித்து எமது கட்சி இதுவரை
தீர்மானிக்கவில்லை. எமது கட்சியின் உயர் பீடக் கூட்டத்தில்
இவ்விடயம் தொடர்பாக நாம் கலந்தாலோசிப்போம் பொருத்தமான
தீர்மானத்தை தக்க சந்தர்ப்பத்தில் வௌியிடுவோம் என்றார்.
மேலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொள்கை பரப்புச்
செயலாளரும் கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளரும் முன்னாள் மாகாண
அமைச்சருமான எம்.எஸ்.சுபைர் இவ்விடயம் தொடர்பில் வௌியிட்டுள்ள ஊடக
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மத்திய அரசாங்கத்தில் எமது கட்சி
பங்காளியாகவுள்ளது.அதே போல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அதே
ஆட்சியில் இருக்கின்றது.கிழக்கு மாகாண சபையிலும் இரு கட்சிகளும்
மிகவும் நெருக்கமாக இருந்து செயற்பட்டுவருகின்ற நிலையில்அகில
இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாத் பதியூதீனுடன் எவ்வித
பேச்சு வார்த்தைகளையும் நடத்தாது எமது கட்சி மாகாண சபை
உறுப்பினர்களை வரவழைத்து கையொப்பமிடுமாறு முஸ்லிம் காங்கிரஸ்
தலைமை கோரியது.
கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் இருக்க வேண்டும்
என்பதில் எமது கட்சி உறுதியாக இருந்துவந்துள்ளது.அந்த முதலமைச்சர்
பதவி முஸ்லிம் காங்கிரஸுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்பதில் எமது
தலைவர் உள்ளிட்ட நாங்கள் ஆர்வமாக இருந்துவந்துள்ளோம்.ஆனால் இந்த
முதலமைச்சர் தெரிவு தொடர்பில் எவருக்கும் அறிவிக்கப்படாமல் பெயர்
பரிந்துரைக்கப்பட்டு அவருக்கு ஆதரவாக எமது கட்சியின் தலைவர்
இணக்கப்பாட்டைத் தெரிவித்துள்ளார். ஆகவே அதற்கு வலுச் சேர்க்கும்
வகையில் கையொப்பம் இடுமாறு கூறப்பட்டது.
ஆனால் அது தொடர்பில் எமது தலைவருக்கு எவ்வித
தகவல்களும் வழங்கப்படவில்லை என்பதை அறிந்து கொண்ட நான் இவ்வாறான
பிழையான அனுகுமுறை தொடர்பில் அதிருப்தியினை வௌியிட்டதுடன்
தலைமைத்துவத்தின் அனுமதியின்றி கையொப்பம் இட முடியாது என்பதை தெரிவித்தது
எமது கட்சியின் தலைவருக்கும் அது தொடர்பில் அறிவித்துள்ளேன் அதே வேளை
கிழக்கு மாகாண சபை ஆட்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வகிப்பகம் என்பது
மிகவும் அத்தியவசிமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.











.jpg)

