(பேரின்பராஜா சபேஷ்) கிழக்கு மாகாண சபையில் பல நாட்கள் நிலவிய இழுபறிகளுக்கு மத்தியில் புதிய முதலமைச்ரொருவர் பதவியேற்றுள்ள போதிலும் அது தொடர்பான சர்ச்சைகளும்
சலனங்களும் தொடர்கின்றன.
கிழக்கு
மாகாண சபையின் புதிய முதலமைச்சராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த
ஹாபிஸ் நசீர் அகமட் மாகாண ஆளுநர் ஓஸ்ரின் பெர்ணான்டோ முன்னிலையில்
பதவியேற்றுள்ளார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவைரும் அமைச்சருமான ரிசாத் பதியுதின்
கிழக்கு
மாகாண சபையில் ஆட்சி அமைப்பதற்கான பெருன்பான்மையை உறுதிப்படுத்துவதற்கு
கட்சி தலைமைகளுக்கு கூட தெரியாமல் உறுப்பினர்களின் ஆதரவு உறுதிப் பத்திரம்
பெறப்பட்டுள்ளது.
2012ம்
ஆண்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்பு ஆட்சி அமைப்பது தொடர்பாக
ஐக்கிய மக்கள் சுததிர முன்னனிக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ
க்குமிடையிலான ஒப்பந்தம் அடுத்த இரண்டரை வருடங்கள் சிறி லங்கா முஸ்லிம்
காங்கிரஸக்கு முதலரைமச்சர் பதவி என்று கூறுகின்றது.
கிழக்கு
மாகாண சபையை பொறுத்தவரை முதலமைச்சர் பதவிக்கு ஒருவர் நியமிக்கப்பட்டு
விட்டால் பிரச்சினைக்கு தீர்வு வந்து விட்டதாக கருத முடியாது.
முதலமச்சர்
பதவி விடயத்தில் ஏனைய கட்சிகளின் கருத்துக்களை பெறாமல் சிறி லங்கா
முஸ்லிம் காங்கிரஸ அவசர அவசரமாக செயல்பட்டமைக்கான காரணங்களை தங்களால்
அறிய முடியாதிருப்பதாக குறிப்பிடுகின்றார்.
இதே
வேளை கிழக்கு மாகாணத்தில் மூவின மக்களும் வசிப்பதால் ஐக்கிய தேசிய
கட்சியின் தேசிய அமைப்பாளரான தயா கமகே அந்த பதவிக்கு தான் வர வேண்டும் என்ற
எதிர்பார்ப்பைக் கொண்டிருதார்.
தமிழ் தேசிய
கூட்டபப்பு மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுடன் அவர்
பேச்சுக்களை நடத்தியிருந்தாலும் அது சாத்தியப்படவில்லை.
ஐக்கிய தேசிய கட்சியை பொறுத்தவரை குறித்த கட்சிகளை விட குறைந்த ஆசனங்களையே கிழக்கு மாகாண சபையில் கொண்டுள்ளது.
தான்
முதலமைச்சராக வர வேண்டும் என்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள்
11 பேரும் ஆதரவாக இருந்தாலும் தூரஷ்டவசமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை
அதற்கு பச்சைக் கொடி காட்ட வில்லை என்கிறார் தயா கமகே.
அடுத்த
சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கும்
நிலையில் அந்த தேர்தலில் போட்டியிட தயாராகி வரும் அவர் அது வரையுமே அந்த
பதவியை அவர் எதிர்பார்த்து அதற்கான பேச்சுக்களை ஏற்கனவே
நடத்தியிருந்தார்.











.jpg)

