முத­ல­மைச்­ச­ர் பத­வி­க்கு நஸீர் அஹமட் பொருத்­த­மற்­றவர் மு.கா.செல்வாக்கை இழக்கும்

(பேரின்பராஜா சபேஷ்) கிழக்கு முத­ல­மைச்­ச­ராக பத­வி­வ­கிப்­ப­தற்கு ஹாபீஸ் நஸீர் அஹமட் பொருத்­த­மற்­றவர் என தெரி­வித்­துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸி­லி­ருந்து இடை­நி­றுத்­தப்­பட்டுள்ள கிழக்­கு­மா­காண உறுப்­பி­னரும் குழுத்­த­லை­வ­ரு­மான ஏ.எம்.ஜெமீல் முத­லமைச்­சுப்­ப­தவி முஸ்­லிம்­களின் இத­ய­மான அம்­பா­றைக்கு வழங்­கப்­ப­டாது புறக்­க­ணித்­ததன் கார­ணத்தால் அம்­மா­வட்­டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் செல்வாக்கை இழக்கும் எனவும் சுட்­டிக்­காட்­டியுள்ளார்.
கிழக்கு மாகாண முத­ல­மைச்­ச­ராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பிர­தித்­த­லை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான ஹபீஸ் நஸீர் அஹமட் பரிந்துரைக்கப்பட்டமை மற்றும் கட்­சி­யி­லி­ருந்து இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ளமை தொடர்பில் ஏ.எம்.ஜெமீ­லிடம் மேற்­கண்­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்

கிழக்கு மாகாண முத­ல­மைச்­சுப்­ப­தவி அம்­பாறை மாவட்த்­திற்கே வழங்க வேண்டும் என்­பதை நான் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வந்தேன். குறிப்­பாக ஆட்சி மாற்­றத்தின் பின்னர் எனது பெயர் முத­ல­மைச்சர் பத­விக்­காக பரி­சீ­லனை செய்­யப்­பட்டு வந்­தது. இருப்­பினும் தற்­போது ஹபீஸ் நஸீர் அஹ­மடின் பெயர் பரிந்­துரை செய்­யப்­பட்டு முத­ல­மைச்­ச­ராக சத்­தி­யப்­பி­ர­மானம் செய்­துள்ளார். இந்­நி­லையில் அம்­பாறை மாவட்­டத்தை மு.கா தொடர்ச்­சி­யாக புறக்­க­ணித்து வரு­கின்­றது. இதற்­கா­கவே மக்கள் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர். அதற்கும் எனக்கு எந்­த­வொரு தொடர்­பு­களும் கிடை­யாது. மேலும் கட்­சியின் உயர் பீட உறுப்­பினர் கிழக்கு மாகாண குழுத்­த­லைவர் இளைஞர் காங்­கிரஸ் அமைப்­பாளர் என பத­வி­களை வகித்து அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்டு வரும் என்­மீது கட்சித் தலை­மைக்கு ஐயப்­பா­டுகள் காண்ப்­பட்டால் அம்­ப­ரை­றையைச் சேர்ந்த மன்சூர் அல்­லது அட்­டா­ளச்­சே­னையைச் சேர்ந்த நஸீ­ருக்கு வழங்­கு­மாறு தலை­மை­யிடம் நேர­டி­யா­கவே கோரிக்கை விடுத்தேன். என்னை பொறுத்­த­வ­ரையில் அம்­பாறை மாவட்­டத்­திற்கு முத­ல­மைச்சர் பதவி வழங்­கப்­ப­ட­வேண்டும் என்­ப­தி­லேயே நான் உறு­தி­யாக இருந்­தேனே தவி­ரவும் எனது தனிப்­பட்ட சுய­ந­லன்­க­ளுக்­காக அல்ல என்­பதை சுட்­டிக்­காட்ட விரும்­பு­கின்றேன்.

அதே­நேரம் தற்­போது முத­ல­மைச்­ச­ராக மு.கா தலை­மை­யினால் பரிந்­துரை செய்­யப்­பட்டு சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்­துள்ள ஹபீஸ் நஸீர் அஹ­மட்டை பொறுத்­த­வ­ரையில் ஆரம்­பத்தில் கட்­சியின் பிள­வுக்கு முக்­கி­ய­மான கார­ண­மாக இருந்­தவர். அத்­துடன் கட்­சியின் தலை­மை­ய­க­மான தாரு­ச­லாமை இன்றை வரையில் சரி­யாக தௌிவுபடுத்­தல்­க­ளிடம் முழு­மை­யாக கட்­சி­யிடம் ஒப்­ப­டைக்­க­வில்லை. மேலும் நடை­பெற்று முடி­வ­டைந்த ஜனா­தி­பதி தேர்­தலில் தற்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஆத­ரிக்கும் முடிவை கட்சி எடுத்­தி­ருந்­த­போதும் அம்­மு­டி­வுக்கு அவர் முழுமையாக உடன்பாடாதிருந்ததோடு பிரசார செயற்பாடுகளிலும் ஒதுங்கியிருந்தார் என்பது அனைவரும் அறிந்த விடயம். இவ்வாறான நிலையில் அம்பாறை மாவட்டத்தை புறக்கணித்து அவருக்கு பதவியளிக்கும் வகையில் சிறந்தவொருவர் என்பதை ஏற்க முடியாது என்பதுடன் அப்பதவிக்கு அவர் பொருத்தமற்றவர் என்றே நான் கருதுகின்றேன் என்றார்.