(பேரின்பராஜா சபேஷ்) மட்டக்களப்பு,
உன்னிச்சைக் குளத்தின் அணைக்கட்டின் அருகில் காணப்படும் கற்தூண்களில் எழுதப்பட்டிருந்த
சாசன
வாசகங்கள் நாகர் குறித்த ஆய்வு
முயற்சிகளில் முக்கிய சான்றாக
அமைகின்றன. வரிவடிவ வளர்ச்சி நிலையினை அடிப்படையாகக் கொண்டு
இச்சாசனங்கள்
கி.பி. இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டுகளுக்குரியவை என்று கருதலாம் என வரலாற்றுத்துறை
தகைசார் பேராசிரியர் சி.
பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
இந்தப்
புதிய
கல்வெட்டுச் சாசனம் தொடர்பாக
பேராசிரியர் மேலும்
தெரிவிக்கையில் கூறியதாவது,
'வேள்ணாகன் மகன் வேள்கண்ணன் மகன் வேள்ணாகன்' என்ற ஒரே
வசனம்தான் இரண்டு தூண்களிலும் எழுதப்பட்டுள்ளன.
இந்த
ஒரே
வாசகத்தின் மூலம் மூன்று தலைமுறைகளுக்குரிய
நாகர்
குலத்து வேளிர்களைக் குறிப்பிடுவது இச்சாசனத்தின் சிறப்பம்சம். இக்கல்வெட்டுகளில்
வேறு
பல
சிறப்பம்சங்களும் உள்ளன. ஓன்றிலே
சூரிய
மண்டலம், நிறைகுடம்,
குழல்
போன்றவற்றின் உருவங்கள் தெரிகின்றன. சிங்கம் போன்ற
மிருகம் ஒன்றை
பாம்பு
சுற்றியிருக்கின்ற கோலம் தெரிகின்றது. இவ்வாறான உருவங்கள் இதுவரை
வேறிடங்களில்
கிடைத்த கல்வெட்டுகளிலும் காணப்படுகின்றன.
இக்
கற்தூண்கள் காணப்பட்ட பகுதி
நாக
அரசர்
வாழ்ந்த மாளிகையினதோ
மணிநாகன் பள்ளி ஒன்றினதோ கட்டடம் ஒன்றிற்கு
உரியனவாதல்
வேண்டும். ஆதியில் உன்னிச்சைக் குளத்தில் நாகர் மன்னர்கள்
மாளிகை
அமைத்தனர் என்று கருதலாம். தூண்களைச்
சுற்றி
அளவிலே பெரிதான
செங்கற்களும் பெருமளவிலான மட்கலங்களின் துண்டங்களும் காணப்படுகின்றன என்று இந்த
கல்வெட்டுச் சாசனத்தை மின்னஞ்சலில் அனுப்பி வைத்த
செ.பத்மநாதன்
தெரிவித்தார்.











.jpg)

