(டினேஸ் சேனைக்குடியிருப்பு)
சிவபக்தன் இராவணேஸ்வரனால் ஆட்சி செய்யப்பட்டு தன்னகத்தே சிவாலயங்கள் பல கொண்டு மகாவலிகங்கையூம் மாணிக்ககங்கையூம் விளைவாய் பொங்கவைக்கும் சிவலிங்கத்தின் ஆவூடையார் வடிவில் அமைந்து இந்து சமுத்திரத்தினால் தாலாட்டப்படும் சிவபமி எனத் திருமூலநாயனாரால் புகழப்பட்ட ஈழமணித் திருநாட்டில் கிழக்கு மாகாணமாக விளங்கும் மட்டக்களப்பு மாவட்டத்தின் நீர்வளம் நிலவளம் ஒருங்கே அமைந்து ஏரையூர் எனும் நாமம் கொண்ட கிராமத்தில் இருந்து சற்று தூரத்தில் அமைந்துள்ள பழம்பெரும் கிராமமான குமாரவேலியார் என்ற நாமத்தினை கொண்டு 30 வருடங்களுக்கு மேலாக இக்கிராமத்தில் வல்வினை போக்கி நல்வினை அளித்திடும் முப்பிரணவமூர்த்தியான ஸ்ரீ செல்வ விநாயகருக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் நிகழும் மங்களகரமான மன்மத வருடம் ஆவணிமாததம் 10ம் நாள் (27.08.2015) வியாழக்கிழமை காலை திரியோதசி திதியூம் உத்தராட நட்தக்கிரமும் சித்தயோகமும் கன்னிமலக்கினமும் கூடிய காலை மணிமுதல் மணிலரையிலான சுபநேரத்தில் கும்பாபிஷேகம் நிகழ இறையருள் கைகூடியூள்ளது. எனவே அடியார்கள் யாவரும் வருகைதந்து கிரியைகளில் கலந்து கொண்டு திருவருட்கடாட்சத்தை பெற்றுய்வீர்களாக.