கல்முனை சேனைக்குடியிருப்பில் இன்று (30) காலை 8.30 மணியளவில் குறித்த கிராமத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரினால் யுவதி ஒருவரின் வீட்டுகுள் புகுந்து அந்தப்பெண்னை கூரிய ஆயுதம் கொண்டு தாக்கியுள்ளார்.
குறித்த பெண் 16 தையல் இடப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளதாகவும், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றம் செய்ய உள்ளதாகவும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இருந்து தகவல்கள் பெறப்பட்டது
குறித்த யுவதி தொடர்பான முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக சந்திரசேகரம் உதயராஜ் என்பவரை கைது செய்ததாகவும், தாக்குதல் மேற்கொண்டவர் தற்போது தலைமறைவாகியுள்ளதாகவும், கல்முனை பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.